5 ஆசிரியர்கள் இட மாற்றம்: மாணவிகள் போராட்டம்
Added : டிச 02, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News

வேலுார்: வேலுாரில், ஐந்து ஆசிரியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து மாணவிகள் உள்ளிப்பு போராட்டம் நடத்தினர்.
வேலுார் கொசப்பேட்டையில், ஈ.வே.ரா., பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1,200 மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மேல்நிலை வகுப்புக்கு தமிழ், பொருளாதாரம், வேதியல், இயற்பியல் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் சங்கீதா, சுமித்ரா, புகழ், சங்கரி, லட்சுமி ஆகியோர் கடந்த மாதம் வேலுாரில் உள்ள சில பள்ளிகளுக்கு இட மாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 10:00 மணிக்கு மாணவிகள் பள்ளி வளாகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலுார் தெற்கு போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில், ஆசிரியர்கள் இட மாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவர்களை அதே இடத்தில் பணியில் அமர்த்த வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய முடியாது என மாவட்ட கல்வி அலுவலர் முனிசாமி கூறினார். பிற்பகல் 12:00 மணி வரை மாணிவிகள் போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனை குறித்து பரிசீலிக்கப்படும் என பள்ளி ஆசிரியர்கள் கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு வகுப்பிற்கு சென்றனர்.
.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
Sureshkumar - Coimbatore,இந்தியா
03-டிச-202210:27:35 IST Report Abuse
Sureshkumar அமாம், முழு ஆண்டு தேர்வு முடித்தவுடன் ஆசிரியர்களை மாறுதல் செய்தால் யார்க்கும் பாதிப்பு இருக்காது.
Rate this:
Cancel
Sureshkumar - Coimbatore,இந்தியா
03-டிச-202210:26:02 IST Report Abuse
Sureshkumar amam
Rate this:
Cancel
பிரபு - மதுரை,இந்தியா
03-டிச-202204:01:51 IST Report Abuse
பிரபு ஆசிரியர்கள் இடமாற்றம் என்பது ஆண்டு இறுதி விடுமுறையின்போது செய்தால் அது மாணவர்களின் படிப்பை பாதிக்காது.
Rate this:
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
03-டிச-202207:35:34 IST Report Abuse
தியாகு இது தெரிஞ்சா அன்பில் மகேசு பொய் மொழி அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணாவின் அகில உலக ரசிகர் மன்ற தலைவராக இருப்பாரா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X