சேலம்:விசாகப்பட்டினத்தில் இருந்து சேலம், ஈரோடு வழியே, நாளை முதல், சபரிமலைக்கு வார சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்கு, ஏற்கனவே, 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து, டிச., 4(நாளை) முதல், மேலும் ஒரு வார சிறப்பு ரயில் சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் வழியே இயக்கப்பட உள்ளது.
அதன்படி காலை, 7:20 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் மதியம், 12:55 மணிக்கு கொல்லத்தை அடையும். இந்த ரயில், டிச., 4, 11, 18, 25, ஜன., 1, 8, 15 ஆகிய நாளில் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இரவு, 8:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் இரவு, 11:50 மணிக்கு, விசாகப்பட்டினத்தை அடையும். இந்த ரயில், டிச., 5, 12, 19, 26, ஜன., 2, 9, 16 ஆகிய நாளில் இயக்கப்படும். இந்த ரயிலில், 12 குளிர்சாதன பெட்டி, 5 படுக்கை பெட்டி, 3 பொது பெட்டி இணைக்கப்பட்டிருக்கும்.
விஜயவாடா, நெல்லுார், ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும்.