கிருஷ்ணகிரி:மூன்றாவது, ஏறு தழுவுதல் கல்வெட்டு, கிருஷ்ணகிரி அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டு, பண்டைய தமிழர்களால் மிகவும் போற்றப்பட்டு வந்ததை சங்க இலக்கியங்கள் சிறப்பித்து பேசுகின்றன.
அதுகுறித்த நடுகல் தடயங்கள், சேலம் மாவட்டம் ஆத்துார், கருமந்துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம், புதுார் அருகேயும் கிடைத்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அகரத்தில், மூன்றாவது ஏறுதழுவுதல் நடுகல் சிக்கியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள அகரம் என்ற ஊரில், தென்னந்தோப்பில் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. இது, 300 ஆண்டுகள் பழமையானது.
இவ்வாறு அவர் கூறினார்.