ஒரகடம் மேம்பாலம் பராமரிக்கப்படுமா?
வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்பதுார் - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை இணையும் நான்கு சாலை சந்திப்பில் ஒரகடம் அமைந்துள்ளது. இங்கு போக்குவரத்து நெரிசலை தடுக்க ஒரகடத்தில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலம் மீது பராமரிப்பின்றி உள்ளது. மண் குவியலாகவும், செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. ஒரகடம் மேம்பாலத்தின் மீது உள்ள சாலை பராமரிக்க வேண்டும். -
- ஆர்.ஆனந்தன், ஒரகடம்.
கழிப்பறை திறக்கப்படுமா?
காஞ்சிபுரம், காமாட்சியம்மன் சன்னதி தெரு, பழைய ரயில் நிலையம் அருகில், எட்டு ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது.
இப்குதிவாசிகளுக்கு மட்டுமின்றி ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணியருக்கும் கழிப்பறை உபயோகமாக இருந்து வந்தது. இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கழிப்பறை மூடப்பட்டுள்ளது. பயன்பாடின்றி உள்ள கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.மணிகண்டன், பெரிய காஞ்சிபுரம்.
பாலிதீன் கவரில் குப்பை
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் தெற்கு மாட வீதி உள்ளது. இங்கு, மாநகராட்சி கழிப்பறை எதிரே, குப்பை தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் குப்பை கொட்டுவதில்லை. பெரும்பாலானோர் குப்பை தொட்டிக்கு பக்கத்திலேயே பாலிதீன் கவரில் குப்பை வைத்து வீசி செல்கின்றனர்.
இந்த குப்பைகளை, மாடுகள் சாப்பிடுகிறது. இதனால், மாடுகளுக்கு செரிமானக்கோளாறு ஏற்பட்டு, மாடுகள் இறக்க நேரிடும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க, பாலிதீன் கவர்களின் குப்பை கொட்டக்கூடாது என, மாநகராட்சி அறிவுரை வழங்க வேண்டும்.
-கே. மணி, காஞ்சிபுரம்.