வாலாஜாபாத்:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, பொன்னேரிக்கரை, பரந்துார், கொட்டவாக்கம், மூலப்பட்டு, சாமந்திபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக, வரதாபுரம் கிராமம் வரையில், அரசு பேருந்து இயக்கப்படுகிறது.
இந்த பேருந்து, காலை, மாலை ஆகிய இருவேளைகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த அரசு பேருந்து மூலமாக, பல்வேறு கிராம மக்கள் மற்றும் கிராமப்புற அரசு பள்ளி மாணவ-மாணவியர் காஞ்சிபுரம் சென்று, உயர் கல்வி படித்து வருகின்றனர்.
கொரோனா கால கட்டங்களில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்து மீண்டும் இயக்கப்படவில்லை.
இதனால், வரதாபுரம், சாமந்திபுரம், மூலப்பட்டு, கொட்டவாக்கம் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த கிராம மக்கள் மற்றும் அரசு மாணவ - மாணவியர், 2 கி.மீ., துாரம் கம்மவார்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து பிடித்து செல்ல வேண்டியுள்ளது. மாலை நேரங்களில் அச்சத்துடன் வீடு திரும்ப வேண்டியுள்ளது.
இதை தவிர்க்க, நிறுத்தப்பட்ட அரசு பேருந்து மீண்டும் இயக்க வேண்டும் என, பல தரப்பு கிராம மக்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.