திருச்சி : திருச்சி சமயபுரம் சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அதிநவீன சி.டி., ஸ்கேன் பரிசோதனை நிலையத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் துவங்கி வைத்தார்.
விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் துணை தலைவர் கதிரவன், இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், செயலாளர் நீல்ராஜ், துணை வேந்தர் ரஞ்சன், பதிவாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.
மேலும், சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி புலமுதல்வர் துளசி, பல்கலை புலமுதல்வர்கள் பேச்சியம்மாள், சேகர், சீனிவாசன் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அதிநவீன சி.டி., ஸ்கேன் பரிசோதனை மூலம் நோயாளிகள் மருத்துவர்களின் உதவியுடன் நோயினை விரைவாக முதல் பரிசோதனையிலேயே கண்டறிய முடியும்.
சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லுார் சுற்று வட்டார கிராம மக்கள் இனி சி.டி.,ஸ்கேன் பரிசோதனைக்கு தொலைதுாரம் பயணம் செய்ய வேண்டியிருக்காது.
இந்த அதிநவீன சி.டி., ஸ்கேன் பரிசோதனையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.