காங்கேயம் : காங்கேயம் வட்டாரத்தில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கும், கலை திருவிழா போட்டி பல்வேறு தலைப்புகளில், காங்கேயம் - சென்னிமலை சாலையில், ஒரு திருமண மண்டபத்தில் மூன்று நாட்கள் நடந்தது. சேர்மன் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
பேச்சு, கட்டுரை, கையெழுத்து, ஓவிய போட்டிகள், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், இசைக்கருவி வாசித்தல், நாடகம், தனி நபர் மற்றும் குழு நடிப்பு போட்டி, கும்மி நடனம், தனி நபர் நடனம், குழு நடனம் என, 80 வகையான பல்வேறு கலை போட்டிகள், பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு நடந்தது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்று வழங்கினர்.
பரிசளிப்பு விழாவில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அமுதா, காங்கேயம் நகராட்சி தலைவர் சூரிய பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.