பெருந்துறை : பெருந்துறை ஒன்றியத்தில், ௧.௦௧ கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை துவக்கியும், 46.21 லட்சம் ரூபாய் மதிப்பில் பணி முடிந்த கட்டடங்களை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று திறந்து வைத்தார்.
இதன்படி சீனாபுரம் பஞ்., ஆயிகவுண்டன்பாளையத்தில், 34.20 லட்சம் ரூபாய் மதிப்பில் குளம் அமைக்கும் பணி; தலையம்பாளையத்தில், ௪0.57 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். நிச்சாம்பாளையம் பஞ்.,ல், 26.3௦ லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.\
கராண்டிபாளையம் பஞ்.,ல், 22.65 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பஞ்., அலுவலக கட்டடம்; சின்னவீரசங்கிலி பஞ்.,ல், 23.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பஞ்., அலுவலக கட்டடத்தையும், அமைச்சர் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார்.
நிகழ்ச்சியில் பெருந்துறை ஒன்றிய தி.மு.க., செயலாளர்கள் சாமி, சின்னசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.