குண்டடம், : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த, குண்டடம், வேங்கிபாளையத்தை சேர்ந்த, 11 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறார். அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். இவரது உறவினர் மோகன், 24, என்பவருடன், மாணவன் நேற்று முன்தினம், வெளியில் சென்று விட்டு திரும்பியபோது, தீக்காயத்துடன் இருந்தார். மோகனை குண்டடம் போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர்.
பெட்ரோலை முகர்ந்து பார்க்கும் போது, ஒருவகை போதை ஏற்படும் என்று மோகன், மாணவனிடம் கூறியுள்ளார். இதை நம்பி அவருடன் சென்றார். கவரில் பெட்ரோலை ஊற்றி முகர்ந்து பார்க்க வற்புறுத்தினார். அப்போது மாணவன் சட்டையில் சிந்தியது.
பின், புகை பிடிக்க பீடியை மோகன் பற்ற வைத்தபோது, சட்டையில் தீப்பிடித்து காயம் ஏற்பட்டது தெரிந்தது. மோகனை குண்டடம் போலீசார் கைது செய்தனர்