கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சார்பில், சிறப்பு பெட்டிஷன் மேளா, நேற்று நடந்தது. மாவட்ட எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
இதில், மாவட்டம் முழுவதிலும் குற்றவியல் வழக்கு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து, மனுக்களை பகுதி வாரியாக போலீசார் பெற்றுக்கொண்டனர். பண மோசடி, வேலை வாங்கி தருவதாக மோசடி உள்பட, 24க்கும் மேற்பட்ட மனுக்கள் ஏற்கப்பட்டு, 15 வழக்குகள் உடனடியாக பதியப்பட்டன.
ஏ.டி.எஸ்.பி.,க்கள், விவேகானந்தன், சங்கு, டி.எஸ்.பி.,க்கள் தமிழரசி, மனோகரன், சரவணன் மற்றும் போலீசார் பலர் லந்து கொண்டு மனுக்களை பெற்றனர்.