ஊத்தங்கரை: ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் வசித்து வருவர் ஐயனார்சாமி; இவரது மனைவி ஷோபனா, 42; இவருக்கு, அவரது மாமனார் தானமாக கொடுத்த நிலத்தை, சென்னப்ப நாயக்கனுார் புதுார் பகுதியை சேர்ந்த வேடியப்பன், 47, சேட்டு, 43, ராதா, 42, சின்னபாப்பா, 41, ஆகியோர், எங்கள் இடத்தில் எப்படி வீடு கட்டலாம் எனக்கூறி, தகாத வார்தையால் திட்டி, வீட்டின் கதவு, சுற்றுச் சுவர் ஆகியவற்றை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக, ஷோபனா ஊத்தங்கரை போலீசில் கொடுத்த புகார்படி, இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.