கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலைப்புலமை மற்றும் அகவை முதிர்வு என, 5 வகையான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து, விருதுகளை வழங்கி பேசியதாவது:
தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பாக பரதநாட்டியம், மேடை நாடகம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்குபெறும் கலைஞர்களுக்கு கலைப்புலமை மற்றும் அகவை முதிர்வு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விருதுகள் பெற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.