ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஹட்கோ ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., வசந்த கதிரவன் மற்றும் போலீசார், கெலவரப்பள்ளி அணை அருகே ரோந்து சென்ற சென்றனர். அப்போது, அப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக, பொது அமைதிக்கு ஆபத்தை விளைவித்ததாக, ஓசூர் அருகே சின்ன முத்தாலியை சேர்ந்த முனுசாமி, 37, கனககொண்டப்பள்ளியை சேர்ந்த மூர்த்தி, 35, பாகலுார் சாலையில் உள்ள இமகிரி சிட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக், 31, ஆகிய மூவரை, சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.