சென்னை, :திருமங்கலம் பகுதியில், போக்குவரத்து எஸ்.ஐ., தங்கராஜ் கடந்த மாதம் வாகன சோதனை ஈடுபட்டிருந்தார். அப்போது, மதுபோதையில் வந்த நபரை மடக்கி பிடிக்கும்போது, அவர் தங்கராஜை தாக்கி தப்பினார்.
திருமங்கலம் போலீசார் விசாரித்து, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் லுார்துவர்மன், 29, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லுார்துவர்மன் மீது கோயம்பேடு, திருமங்கலம்உள்ளிட்ட இடங்களில் அடிதடி வழக்குகள் உள்ளன. இதற்கிடையில், தான் திருந்தி வாழ போவதாக கூறி, அண்ணா நகர் துணை கமிஷனர் விஜயகுமாரிடம் பிரமாண பத்திரம் எழுதி கொடுத்தார்.
இந்நிலையில், பிணை மீறி எஸ்.ஐ.,யை தாக்கிய வழக்கில் லுார்துவர்மன் கைது செய்யப்பட்டார்.நன்னடத்தை மீறிய குற்றத்திற்காக, அண்ணா நகர் துணை கமிஷனர் உத்தரவின்படி, லுார்துவர்மன் 289 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.