சென்னை, :சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் சந்திரபோஸ், 39.
இவர், பாரத ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்றதுபோல் போலி சான்றிதழ் தயாரித்து, ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் வங்கி என்ற பெயரில் ஒன்பது நகரங்களில் போலியாக வங்கி நடத்தி வந்தார்.
இதன் வாயிலாக, பொதுமக்களின் வைப்பு நிதி மற்றும் சேமிப்பு பணத்தை மோசடி செய்தது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
அதேபோல், கே.கே.நகரைச் சேர்ந்த ஜெயசீலன், 63, அவரது மனைவி ராமலஷ்மி, 43, ஆகியோர், கடன் பெற்று தருவதாக கூறி 50 லட்சம் ரூபாய் மோசடி செய்தனர்.
இதுபோன்று தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 11 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இந்தாண்டில் இதுவரை 453 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.