கோயம்பேடு:முகூர்த்த நாட்கள் மற்றும் வரத்து குறைவால், பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
சென்னை, கோயம்பேடு சந்தைக்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் பூக்கள் வரத்து உள்ளது.
கார்த்திகை மாத துவக்கத்தில் இருந்து, சபரிமலை சீசனுக்காக பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும், இன்றும் நாளையும் முகூர்த்த நாள் என்பதால், பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நேற்று கோயம்பேடு பூ சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால், வாசனை பூக்கள் வரத்து குறைந்ததால், அவற்றின் விலை அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ மல்லி 1,500 - - 1800 ரூபாய்க்கும், ஜாதி 750 -- 900, முல்லை 1,050 - 1,200 ரூபாய்க்கும் விற்பனையாயின.இதேபோல், சாமந்தி - 50 -- 80 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 120 -- 140, சாக்லேட் ரோஸ் 160 ரூபாய்க்கும் விற்பனையாயின.