சென்னை, :சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு:
சென்னை மாநகராட்சியில் 16 ஆரம்ப சுகாதார மையங்களில் தலா ஒரு பல் டாக்டர் என, 16 பேர் உள்ளனர். இவர்கள், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் 2022 ஆகஸ்ட் முதல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆரம்ப சுகாதார மையங்களில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை, தினசரி காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை, பொதுமக்களுக்கு பற்களில் சொத்தை, பல் மற்றும் ஈறுகளில் தொற்று, பற்களில் சீழ், நோய் தாக்கம், சிதைவு, அளவிடுதல், பற்கள் மறுசீரமைப்பு, நோயுள்ள பற்களை எடுத்தல் போன்ற பல்வேறு பல் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்த 16 ஆரம்ப சுகாதார மையங்களில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவில், ஒருவாரத்தில் 1,951 பேர் பயனடைந்துள்ளனர்.