பெருங்குடி, சென்னை மாநகராட்சியின் 14வது மண்டலம் பெருங்குடி. இதில் 11 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் பல்வேறு மக்கள் நல கட்டமைப்புகளுக்கான பணிகள் துவங்கப்பட்டு, அதில் பல நிறைவடைந்துள்ளன.
பணிகள் முடிந்த கட்டமைப்புகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான திறப்பு விழா மற்றும் புதிய பணிகளுக்கான துவக்க விழா நிகழ்ச்சிகள், நேற்று காலை முதல் மாலை வரை பெருங்குடி மண்டலத்தின் பல வார்டுகளில் நடைபெற்றது.
இவற்றில், பாலவாக்கம் கந்தசாமி நகர் பூங்கா, ஈஞ்சம்பாக்கம் அண்ணா என்கிளேவ் பூங்கா, பெருங்குடி எம்.ஜி.ஆர்., சாலை ரமணியம் குடியிருப்பு பூங்கா, பள்ளிக்கரணை காமகோட்டி நகர் பூங்கா உள்ளிட்ட பல கட்டமைப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டன.
இதில், சென்னை மேயர் பிரியா, சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.