ரக்கோணம்:அரக்கோணம் அருகே, மணல் கொள்ளை குறித்து தகவல் தராத அரசு அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே மோசூரில், தமிழக அரசின் ஐ.டி.ஐ., கல்வி நிறுவனம் உள்ளது; இங்கு 750 மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்கு, 3 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் பயிற்சி மையம் கட்டட கட்டுமான பணி நடக்கிறது. இதை செய்யும் சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர், மோசூர் ஆற்றிலிருந்து கள்ளத்தனமாக மணலை எடுத்து, கட்டுமான பணிக்கு பயன்படுத்தியுள்ளார்.
கட்டுமான பணிகளை மேற்பார்வை செய்து வரும், அந்த கல்வி நிறுவனத்தின் அலுவலர் வெங்கடேசன், 40, என்பவரிடம், மணல் கொள்ளை குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், அவர் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து அப்பகுதி மக்கள் ஐ.டி.ஐ., முதல்வர் அன்புச்செல்வியிடம் புகார் செய்தனர். விசாரணையில், மோசடி அம்பலமானது.
அதுகுறித்து அலுவலகத்திற்கு தகவல் அளிக்காத, ஐ.டி.ஐ., அலுவலர் வெங்கடேசனை, 'சஸ்பெண்ட்' செய்து ஐ.டி.ஐ., முதல்வர் நேற்று உத்தரவிட்டார்.