மதுரை : மாஸ்டர் விளையாட்டு மாநில சங்கம் சார்பில் ஐதராபாத்தில் நடத்தவுள்ள 5வது தேசிய மாஸ்டர்ஸ் விளையாட்டுகளுக்கான தமிழக அணித்தேர்வு டிச., 18 ல் திருநெல்வேலி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடக்கவுள்ளது.
தடகளம், வில் வித்தை, பாட்மின்டன், கூடைபந்து, சைக்கிளிங், கால்பந்து, ேஹண்ட்பால், ஹாக்கி, கபடி, பவர் லிப்டிங், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள்டென்னிஸ், டென்னிஸ், வாலிபால், பளு துாக்குதல், மல்யுத்த போட்டிகள் தேசிய அளவில் நடக்கவுள்ளன.
இதற்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு திருநெல்வேலி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் டிச., 18 காலை 7:00 மணி முதல் நடக்க உள்ளது.
இதில் தேர்வானவர்கள் தேசிய போட்டிக்கு தகுதி பெறுவர். நுழைவு கட்டணம் உண்டு. மதுரையை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமாரை 94899 43610ல் தொடர்பு கொள்ளலாம்.