விழுப்புரம்-விழுப்புரம் இ.எஸ்., மருத்துவமனையில் கதிரியக்க பரிசோதனை சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது.
விழுப்புரம் இ.எஸ்., மருத்துவமனை விழுப்புரத்தில் சிறந்த மருத்துவ சேவை வழங்கி வருகிறது. இதுகுறித்து மருத்துவமனையின் மேலாண் இயக்குனர் மருத்துவர் சரவணன் கூறியிருப்பதாவது:
தற்போது கதிரியக்கத் துறையில் மேம்படுத்தப்பட்ட சிறப்பு மருத்துவ சேவையை அளித்து வருகிறது. இங்கு அனைத்து நோய்களையும் கண்டறியும் விதமாக சிறப்பு அனுபவம் பெற்ற மருத்துவ நிபுணர்களால் மிக துல்லியமான கதிரியக்க பரிசோதனை செய்யப்படுகிறது.
எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை தமிழகத்தில் முதன் முறையாக அதிநவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களாக, மிக துல்லியமான பிம்பங்கள் மற்றும் முடிவுகள் தெரியும்.
மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். தலை முதல் கால் வரை அனைத்து உடல் உறுப்புகளையும் ஸ்கேன் செய்து பிரச்னைகளைத் துல்லியமாக கண்டறியும் வசதி. எலும்பியல் இம்பிளான்ட் ஸ்கேனிங், பரிசோதனையின் போது குறைந்த சத்தம், குறைந்த அளவு மூச்சு பிடித்தல் போன்ற வசதிகள் உள்ளன.
இதேபோல் சி.டி., ஸ்கேன் பரிசோதனையில்., மார்பக புற்று நோய் பரிசோதனை ஊடொலி பரிசோதனை. ஆஞ்சியோகிராபி, பல் எக்ஸ்ரே பரிசோதனை, டாப்ளர் பரிசோதனை, எளிய ஊடுகதிர் சோதனைகள் போன்ற அனைத்து வகை கதிரியக்க பரிசோதனைகளின் மூலம் பல வகை புற்றுநோய் கட்டிகள்.
பித்தப்பை கற்கள், சிறுநீரக கற்கள், எலும்பு முறிவுகள், மூட்டு விலகல், மூளையில் ஏற்படும் ரத்தக் கசிவு, பக்கவாதம், சுவாசக் குழாய் மற்றும் நுரையீரல் நோய்கள்.
ரத்தக்குழாய் அடைப்புகள், குடல் அடைப்பு மற்றும் கட்டிகள், கல்லீரல் நோய்கள் மற்றும் பல்வேறு பிரச்னைகளுக்கு சிறந்த முறையில், குறைந்த செலவில், சிறந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு டாக்டர் சரவணன் கூறினார்.