ரூ.400 கோடி மோசடி35 வாகனங்கள் ஈடு
Added : டிச 04, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தினர், 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 35 வாகனங்களை மட்டும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தஞ்சாவூர், ரஹ்மான் நகரைச் சேர்ந்த கமாலுதீன் என்பவரின் ராஹத் டிராவல்ஸ் நிறுவனத்தில் இயங்கும் பஸ்கள் மீது முதலீடு செய்தால் மாதந்தோறும் ஈவுத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார்; ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், கமாலுதீன் இறந்து விட்டார்; முதலீடு செய்தவர்களுக்கு ஈவுத்தொகை மற்றும் முதலீடு தொகை வழங்கப்படவில்லை.

இதனால், முதலீட்டாளர்கள் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகார், திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அந்த டிராவல்ஸ் நிறுவனம் 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, 6,380 பேர் புகார் அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானதும், கமாலுதீன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் வாங்கப்பட்ட 154 வாகனங்களில், 35 வாகனங்கள் மட்டுமே இப்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் உள்ள, 119 வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இது குறித்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., லில்லி கிரேஸ் கூறியதாவது:

பலரின் முதலீடு பணத்தின் மூலம் கமாலுதீன், அவரது குடும்பத்தினர் ரேஹானாபேம், அப்துல் கனி, அப்துல் ரஹ்மான் ஆகியோரது பெயர்களில், ஆம்னி, டவுன், புறநகர், மினி பஸ்கள், சொகுசு கார்கள், சுற்றுலா வாகனங்கள் என 154 வாகனங்கள் வாங்கியிருந்தனர்.

அதில், 35 வாகனங்கள் முதற்கட்டமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரி, கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களிலும், அந்த நிறுவன வாகனங்கள் இயங்குவது தெரிய வந்துள்ளது.

மோசடி செய்த பணத்தில் வாங்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து வாகனங்களையும் மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X