புதுச்சேரி-புதுச்சேரியில் நாய் தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி 10 நிமிடங்களில் இறந்தது.
புதுச்சேரி, முருங்கப்பாக்கம், நடுத்தெருவை சேர்ந்தவர் வீரப்பன்,72; இவர் வளர்த்து வந்த ஆடு, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு குட்டி ஈன்றது.
அந்த குட்டியின் உடல் ஆடு போன்று இருந்தாலும், தலை மட்டும் நாய் போன்று வித்தியாசமாக இருந்தது. மேலும், முகத்தில் கண் இல்லை. வாயும், மூக்கும் ஒன்றோடு ஒன்று மடங்கிய நிலையில் இருந்தது.
வித்தியாசமாக இருந்த இந்த ஆட்டுக்குட்டியை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.
இந்நிலையில் அந்த ஆட்டுக்குட்டி பிறந்த 10 நிமிடங்களில் இறந்தது. அதனையொட்டி அந்த குட்டி, அதே பகுதியில் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.