அவிநாசி:அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், 25 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது.
திருப்பூர் மண்டல ஹிந்து அறநிலையத்துறை சார்பில், காலை 7.45 முதல் 8.45 மணிக்குள், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அவிநாசியப்பர் திருமண மண்டபத்தில், 25 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற உள்ளது.
மணமகளுக்கு இரண்டு கிராம் தங்கத்தில் திருமாங்கல்யம், மணமக்கள் ஆடை, 20 நபர்களுக்கு உணவு, மாலை, குத்து விளக்கு, கிரைண்டர், காஸ் அடுப்பு, குக்கர், பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி, சட்டை, சில்வர் குடம், அண்டா, இட்லி பானை, ஒரு மாதத்திற்கான மளிகை பொருட்கள் என, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர் வரிசை வழங்கப்படுவதாக உதவி கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார்.