அரியாங்குப்பம்-தலையில் படுகாயமடைந்த மனநிலை பாதித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்தவர் நாகராஜன்,50; லாஸ்பேட்டை பொதுசுகாதார பிரிவில் பணி புரிந்து வந்தார். மனைவியை பிரிந்து வாழ்ந்த அவருக்கு மனநிலை பாதித்தது.
அதனையொட்டி கடந்த வாரம் மணவெளியில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 28ம் தேதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடன் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.