சிதம்பரம்-மாநில அளவிலான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் ஜி.கே. மெட்ரிக் பள்ளி மாணவியர் சாதனை படைத்தனர்.
காட்டுமன்னார்கோவில் ஜி.கே. மெட்ரிக் பள்ளி மாணவியர், மாநில அளவில் நடந்த தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில், தேர்ச்சி பெற்றனர். மாணவி ஸ்ரீ கோதைநாயகி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றார். மாணவியர் யாழினி, ராஜராஜேஸ்வரி, சிவா ஜனனி, அபர்ணா ஆகியோர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றனர்.
அவர்களை ஜி.கே. கல்வி குழும தலைவர் குமாரராஜா, மேலாண் இயக்குனர் அருண் ஆகியோர் பாராட்டி, பரிசு வழங்கினர். முதல்வர்கள் பார்த்திபன், தேவதாஸ் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.