கடலுார்-தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை மாநாடு கடலுார் சங்க அலுவலகத்தில் நடந்தது.
மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், பொருளாளர் வெங்கடேசன் அறிக்கை வாசித்தனர். அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் மருதவாணன், ஓய்வூதியர் கூட்டமைப்பு புருஷோத்தமன், அங்கன்வாடி பணியாளர் சங்கம் அனுசுயா, காசிநாதன், கருணாகரன், பாபு, அருள், செல்வகுமார் பேசினர்.
மாநில பொருளாளர் பாஸ்கரன் நிறைவுரையாற்றினார். கூட்டத்தில், நிர்வாகிகள் வெங்கடாஜலபதி, கவியரசு, ரவி, தமிழ்ச்செல்வன், மாநில செயற்குழு லெனின் உட்பட பலர் பங்கேற்றனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்ட ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். 1.1.2022 முதல் 4 சதவீதம் அகவிலைப்படியை முன் தேதியிட்டு வழங்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவர் குமார் நன்றி கூறினார்.