அரசின் 12.66 ஏக்கரை சி.எஸ்.ஐ. நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளது என நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்தது. அவ்விடத்துக்கு கடப்பாரை மண் வெட்டியுடன் செல்ல வேண்டியது தானே... ஆனால் அவ்வாறு செல்ல மாட்டார்கள். தி.மு.க.வினர் நேரடியாக எதிர்த்து பேசினால் ஓட்டு பறிபோகும் என்பதால் இதுபோன்ற கட்சிகளை துாண்டி விடுகின்றனர். அதேநேரம் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பல கோயில்களில் யாகம் வளர்த்து பூஜையில் ஈடுபடுகிறார். அவரை கோயிலுக்கு செல்லக்கூடாது என யாரும் வலியுறுத்துவதில்லை. கோயில்களுக்கு வரும் வருவாயையும் கோயில் நிலங்களையும் அரசு பயன்படுத்தும்போது அரசு நிலத்தில் கோயில் அமைவதில் என்ன தவறு உள்ளது?இவ்வாறு கூறினார்.
ஹிந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகதீசன் கூறியதாவது: கடவுள் இல்லை என கூறுவோர் எல்லா கடவுளையும் எதிர்க்கட்டும். ஹிந்து கடவுளை மட்டும் எதிர்ப்பது தவறானது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடம். அதை இடிக்க வலியுறுத்தட்டும். கோயில் இடம் சொத்து பணத்தை அரசு பயன்படுத்தும்போது அரசு நிலங்களில் கோயில் கட்டுவது தவறில்லை. பல கோயில்களுக்கு வரும் வருமானத்தை அரசு எடுத்து செலவிடுகிறது; அறநிலையத்துறையை நடத்துகிறது. ஹிந்து கோயில்களை மட்டுமே அறநிலையத்துறையின் கீழ் நடத்தும்போது அரசு நிலங்களில் கோயில் கட்டுவது பூஜைகள் செய்வது தவறில்லை. அப்படி கூறினால் அறநிலையத்துறையை அகற்றி கோயில்களை விட்டு அரசு வெளியேறட்டும்.
கோயில்களை ஆன்மிக இறைவழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்களிடம் ஒப்படைக்கட்டும். கோயில்களை இடிக்க வருவேன் என்பது தங்களுக்கு எதிரான செயல்பாடாகவே அரசு பார்க்க வேண்டும். அரசு அலுவலக வளாகத்தில் கோயிலுக்கான யாகசாலை பூஜை செய்வது தவறு என்றால் அரசு சார்பில் ஹஜ் யாத்திரை ஜெருசலேம் பயணத்துக்கு நிதியுதவி வழங்குவதும் தவறு தானே; அதையும் இவர்கள் எதிர்க்கட்டும். இவ்வாறு கூறினார்.
திராவிடர் விடுதலை கழகம் என்ற அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரத்தினசாமி கூறியதாவது: மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கோயில் வழிபாடு செய்வதை எதிர்த்து போராட்டம் நடத்தினோம். அரசு அலுவலக வளாகத்தில் அத்தனை மதத்துக்கும் கோயில்கள் உள்ளதா என பார்க்க வேண்டும். சி.எஸ்.ஐ. நிர்வாகத்தில் உள்ள இடத்தில் சில ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு என நீதிமன்றம் தீர்ப்பு கூறியதை வரவேற்கிறோம்; அதுபோல அரசு வளாகத்தில் கோயில்கள் பூஜைகள் யாக சாலை அமைப்பதையும் எதிர்க்கிறோம். இவ்வாறு கூறினார்.