திருப்பூர் : ''ராணுவ பாதுகாப்பு இல்லாமல், ஸ்டாலின் வெளியே நடமாட முடியாத அளவுக்கு, மக்கள் கொதித்துப்போயுள்ளனர்,'' என, பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, 'பீக் ஹவர்' மின் கட்டணம் என, பொதுமக்களும், தொழில்துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், பொதுமக்களும் பங்கேற்றதே அதற்கு சாட்சி.
விலைவாசி உயர்வால், ஏழை, எளிய மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின், ராணுவ பாதுகாப்பு இல்லாமல் வெளியே வர முடியாத அளவுக்கு, மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்; கொதித்து போயுள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விளக்கி, தி.மு.க.,க்கு 'சம்மட்டி' அடி கொடுத்து, 'லோக்சபா' தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.