புதுக்கோட்டை : ''தமிழகத்தில் தான் முதல் முறையாக, 'ஆன்லைன் ரம்மி'யை தடை செய்ய வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
அவர் ஒப்புதல் வழங்கிய பின், முன்னாள் நீதிபதிகளை வைத்து, சட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை தமிழக அரசு உருவாக்க உள்ளது.
அரசாணை வெளியிடாததால், எந்தத் தவறும் நடக்கவில்லை. ஏற்கனவே, கவர்னர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், அந்த சட்டம், அரசிதழில் வெளியிடப்பட்டது; ஆனால், அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.
அரசாணை பிறப்பித்தால், யாரேனும் நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை வாங்கி விட்டால், சட்டசபையில் சட்ட முன் வடிவு தாக்கல் செய்து, அனுமதி பெற முடியாது. இதில், தமிழக அரசு எந்த தவறும் செய்யவில்லை.
கவர்னரை நாங்கள் குறை கூறவில்லை; கால தாமதப்படுத்துகிறார் என்று தான் கூறி வருகிறோம். கவர்னர் ஒப்புதல் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.