கோவை:கோவையில் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடைபெற்ற குரூப் 6 தேர்வில் 21 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்றதால், அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வனத்துறை பணியிடங்களை நிரப்புவதற்கான இத்தேர்வில், பல ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநிலம் முழுவதும், நேற்று இதற்கான குரூப் 6 நிலை தேர்வு நடந்தது. கோவை மாவட்டத்தில், 1,464 பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. 320 பேர் மட்டுமே பங்கேற்றனர். 1,144 பேர் வரவில்லை. 78 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆனதை அறிந்து, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.