பேரூர்;பா.ஜ., சார்பில் ஆயுஷ்மான் பாரத், மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம், மாதம்பட்டியில் நேற்று நடந்தது. முகாமை, பா.ஜ., மாவட்ட துணை தலைவர் தங்கவேல் துவக்கி வைத்தார். இதில், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு, ஆயுஷ்மான் பாரத், மருத்துவ காப்பீடு திட்டத்தில், இலவசமாக பதிவு செய்யப்பட்டது. நேற்றைய முகாமில், 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீடு திட்டத்தில், 330 பேருக்கு பதிவு செய்யப்பட்டது. பா.ஜ., பேரூர் செட்டிபாளையம் மண்டலத்தின் அரசு தொடர்பு பிரிவு தலைவர் பிரசாந்த், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.