செங்குன்றம்:செங்குன்றம் போலீசாரால், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்களும், பாடியநல்லுார் சோதனை சாவடி அருகே, தேசிய நெடுஞ்சாலை வளைவில் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக, பாடியநல்லுார், செங்குன்றத்திற்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு, தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால், சாலை சந்திப்பில் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலை பயன்பாட்டில் இல்லாத போது நிறுத்தப்பட்ட வாகனங்கள், அந்த சாலை பயன்பாட்டிற்கு வந்த பிறகும், அகற்றப்படாமல் உள்ளன.
அதனால், அந்த இடத்தை கடக்கும் வாகன ஓட்டிகள், நிலைதடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மே லும், அந்த சந்திப்பில், சாலை சமதளமற்று இருப்பதால், நிலைதடுமாறும் இரு சக்கர வாகன ஓட்டிகள், திடீர் விபத்தில் சிக்கி பாதிக்கப்படும் ஆபத்தும் உள்ளது.
எனவே, வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் வைத்து, செங்குன்றம் போலீசார் வழக்கில் சிக்கிய வாகனங்களை, சோதனை சாவடிக்கு மறு பக்கம் நிறுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.