தியாகராஜர் ஆராதனை விழா: பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி
Added : டிச 05, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

தஞ்சாவூர்:திருவையாறு தியாகராஜரின், 176வது ஆராதனை விழாவுக்கு, நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜருக்கு ஆண்டுதோறும், ஐந்து நாட்கள் ஆராதனை விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான ஆராதனை விழா, ஜன., 6ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில், பல்வேறு இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தியாகராஜர் முக்தி அடைந்த பகுளபஞ்சமி தினமான, ஜன., 11ம் தேதி, தியாகராஜருக்கு பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி, இசையஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், தியாகராஜருக்கு மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

இதற்காக நேற்று காலை, பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, முகூர்த்தம் நடைபெற்றது. இதில், தியாகராஜர் சபையின் தலைவரும், எம்.பி.,யுமான வாசன் மற்றும் சபை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதன் பின், ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:

தியாகராஜர் ஆராதனை விழாவின் துவக்க நாளான, 6ம் தேதி மாலை, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், 11ம் தேதி காலை நடைபெறும் தியாகராஜர் பஞ்ச கீர்த்தனை விழாவில், தமிழக கவர்னர் ரவி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

கவர்னர்கள் விழாவில் பங்கேற்பதன் மூலம், அவர்கள் இசைக்கு கொடுக்கும் முக்கியத்துவம், இந்திய அளவில் சபா நிகழ்ச்சிகளை கொண்டு செல்லும்.

மேலும், இசை ஆர்வலர்கள் பலருக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக, இந்த ஆண்டு, ஆறு நாட்கள் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
05-டிச-202211:27:37 IST Report Abuse
அசோக்ராஜ் தியாகராஜர் சபைக்கு தேர்வு எப்படி நடக்கிறது? கலீஜியம் முறைப்படியா? திமுக முறைப்படியா? சாஸ்திரீய சங்கீதம் தெரிந்திருக்க வேண்டாமா? வாசனுக்கு பாடத் தெரியுமா? எந்தத் தகுதியில் சபைத் தலைவராக இருக்கிறார்? இளையராஜாவைத் தலைவராக்க வேண்டும்.
Rate this:
Cancel
Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-டிச-202207:18:24 IST Report Abuse
Shiva ஏன் அந்த சுடாலினுக்கு அழைப்பு இல்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X