அவர்களுக்கு பட்டா வழங்குவது சம்பந்தமாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் சாலை திருத்தம் மற்றும் வாய்க்கால்களை ஆய்வு செய்து, தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பணி மேற்கொள்ளும்படி அதிகாரியிடம் கூறினார்.
அவ்வை நகர் மெயின் ரோடு மற்றும் திருமூலர் நகர், ஜீவானந்தம்மாள் வீதி மற்றும் முதல், 2-வது குறுக்குத் தெருக்களில் வாய்க்கால்களையும் சாலை பணிகளையும் மேற்கொள்ள கூறினார்.
தமிழ்த்தாய் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளம் மேம்படுத்துதல் பணியினையும் ஆய்வு செய்து, அங்குள்ள சாலைகள், வாய்க்கால்களை சீர் செய்து கொடுக்கவும், திப்புராயப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பை வடக்குபுறமும், தெற்குபுறமும் 10 அடி சாலையை விட்டு தள்ளி கட்டும்படி அறிவுறுத்தினார்.
அப்பகுதிகளில் எரியாத மின்விளக்குகளை சீர் செய்து கொடுக்கும்படி மின்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
கொசு மருந்து தெளிக்க சுகாதாரத்துறை அதிகாரியிடம் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., கேட்டுக்கொண்டார்.
நகராட்சி உதவி பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சண்முகம் உடனிருந்தனர்.