கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே பெண்ணைத் தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சின்னசேலம் அடுத்த பாக்கம்பாடியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி ராசாத்தி, 45; அதே ஊரைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி ஜோதி, 48; இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
கடந்த 3 ம் தேதி காலை கடைக்குச் சென்ற ராசாத்தியிடம், ஜோதி அவரது சகோதரர் பெரியசாமி, 42; ஆகியோர் தகராறு செய்து தாக்கினர்.
இது குறித்த புகாரின் பேரில் ஜோதி, பெரியசாமி ஆகியோர் மீது, கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.