காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில் பல இடங்களில் பைக்குளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பைக் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. பைக் திருடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் காரைக்கால், கலைஞர் புறவழிச் சாலையில், நகர இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில், நிறுத்தி விசாரித்தனர். அவரிடம் பைக்குக்கு உரிய ஆவணம் இல்லாததால், தீவிரமாக விசாரித்தனர்.
அவர், நாகை மாவட்டம், திட்டச்சேரி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார், 35. இவர், காரைக்கால் மாவட்டத்தின் பல இடங்களில் ஏராளமான பைக்குகளை திருடியது தெரியவந்தது.
நகர போலீசார் வழக்குப் பதிந்து, சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.