கடலுார் : கடலுார் மாவட்டத்தில் இரவு முழுவதும் இடைவிடாமல் மழை பெய்தது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் இடைவிடாமல் மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை தொடர்ந்தது.
நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல், நேற்று காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், கடலுார் 32.5 மி.மீ., லால்பேட்டை 32, சேத்தியாத்தோப்பு 29, காட்டுமன்னார்கோவில் 28, கலெக்டர் அலுவலகம் 26.2,
சிதம்பரம் 20, அண்ணாமலை நகர் 18, பரங்கிப்பேட்டை 16.2, கொத்தவாச்சேரி 14, ஸ்ரீமுஷ்ணம் 8.2, வானமாதேவி 7, விருத்தாசலம் 5, குப்பநத்தம் 4.6, பண்ருட்டி 2.3, குறிஞ்சிப்பாடி, வடகுத்து, குடிதாங்கி 2 மி.மீ., மழை பதிவானது.
இரு வாரங்களுக்கு பின் பெய்த மழையால் பஸ் நிலையம், நேதாஜி சாலை போன்ற பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. புதுப்பாளையம், திருப்பாதிரிப்புலியூர் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்தன. தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயக்குமார் தலைமையிலான வீரர்கள் சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா பாசன பகுதியில் பெய்த பலத்த மழையால், சம்பா நெல் சாகுபடி நிலங்களில் நீர்ப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வடியவிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.