ஸ்ரீபெரும்புதுார் : தாம்பரம் அருகே படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 26, அலெக்ஸ், 25.
இவர்கள், இருவரும் சேர்ந்து, ஆரம்பாக்கம் பகுதியில் செல்லும் பொதுமக்களிடம், கத்தியை காட்டி மிரட்டி மொபைல் போன், பணம் பறிப்பில் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
தலைமறைவாக இருந்த இருவரையும், போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆரம்பாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, மணிமங்கலம் காவல் ஆய்வாளர் ரஞ்சித்குமார் தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த பாலாஜி, அலெக்ஸ் இருவரும், போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர். போலீசார் இருவரையும் விரட்டி பிடித்தனர்.
அப்போது, தவறி கீழே விழுந்த பாலாஜிக்கு, காலிலும், அலெக்சுக்கு கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து, இரண்டு பட்டாகத்திகள், இரண்டு மொபைல் போன்கள், மூன்று இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.