காஞ்சிபுரம் : உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 22.8 லட்சம் ரூபாய்க்கான கடனுதவிகளை, 62 பேருக்கு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
அப்போது, செங்கல்பட்டை சேர்ந்த வீரராகவன் என்பவருக்கு, 25 ஆயிரம் ரூபாய், கூட்டுறவு துறை சார்பில் கடனுதவி வழங்கப்பட்டது. அவருக்கு இரு மாற்றுத்திறனாளி மகன்கள் இருப்பது கூட்டுறவு துறை தெரியவந்தது.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நிலை குறித்து, பெற்றோரிடம் ராதாகிருஷ்ணன் கேட்டறிந்தார். மேலும், வீரராகவனின் குடும்ப நிலை குறித்து அறிய, மாவட்ட கூட்டுறவுபதிவாளர் மற்றும் மண்டல அலுவலர்கள், வீரராகவனின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.
அவரது ஏழ்மையான குடும்ப சூழல் குறித்தும் செயலர் ராதாகிருஷ்ணனிடம், அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும், அதில், மோனோலீஸ்வரன், கதிரேசன் என இரு மகன்கள் மாற்றுத்திறனாளிகள் எனவும், இருவரும் பிளஸ் 2 வரை படித்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, வீடு கட்டுவதற்கு கடனுதவியும், இரு மாற்றுத்திறனாளிகள் பிள்ளைகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கவும் செயலர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார்.