விதிமீறும் ஆட்டோக்கள்
சபரிமலைக்கு செல்லும் வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களுக்கும் சுற்றுலாசெல்கின்றனர். அவ்வாறு காஞ்சிபுரம் வரும் வெளியூர் பக்தர்கள் பெரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு ஆட்டோ மற்றும் ேஷர் ஆட்டோக்களில் பயணிக்கின்றனர்.
இந்த ஆட்டோக்களில் விதிகளை மீறி 10க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். பிரதான சாலை வழியாக சென்றால் போக்குவரத்து போலீசார் பிடித்து விடுவார்கள் என்பதால், அல்லாபாத் ஏரிக்கரை, பொய்யாகுளம் பகுதியில் உள்ள சந்து தெருக்கள் வழியாக செல்கின்றனர். விதியை மீறும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது போக்குரவத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.கோபால், காஞ்சிபுரம்.
கழிவு நீரால் துர்நாற்றம்
காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், வேளியூர் கிராமம் உள்ளது. இங்கு, தனியாருக்கு சொந்தமான பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதன் கழிவு நீர் தொட்டிகளை, தினசரி இரவு நேரங்களில் திறந்து விடுகின்றனர். இதனால், 2 கி.மீ., துாரம் வரையில் துர்நாற்றம் வீசுகிறது. இதை, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
- எம்.சண்முகம், காஞ்சிபுரம்.