'அம்மா' உணவக ஊழியர்கள் 130 பேருக்கு 'கல்தா': நஷ்டத்தை சரிக்கட்டுவதாக அதிகாரிகள் விளக்கம்
Updated : டிச 05, 2022 | Added : டிச 05, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னையில் உள்ள 'அம்மா' உணவகங்களில் பணி புரிந்த 60 வயதுக்கு மேற்பட்ட 130 ஊழியர்கள், திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். நஷ்டத்தை கருத்தில் வைத்து நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



latest tamil news


சென்னை மாநகராட்சியில், அ.தி.மு.க., ஆட்சியில் 2013ம் ஆண்டு, மலிவு விலை அடிப்படையில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. முதலில், வார்டுக்கு ஒன்று வீதமும், பின் இரண்டு வீதமும் திறக்கப்பட்டன.

அரசு மருத்துவமனைகள் உட்பட, 407 இடங்களில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன. காலையில், இட்லி 1 ரூபாய், பொங்கல் 5 ரூபாய்; மதியம் சாம்பார், கறிவேப்பிலை, எலுமிச்சை சாதம் தலா 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய் மற்றும் இரவு இரண்டு சப்பாத்தி 3 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன.

ஏழை மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அம்மா உணவகம் இருக்கிறது. கொரோனா காலத்தில் பசியைப் போக்கும் இடமாக விளங்கியது. தினமும் 150 முதல் 5,000 ரூபாய் வரை, ஒரு உணவகத்தில் விற்பனையாகிறது. மொத்தம், 4,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
மாதம் 15 லட்சம் ரூபாய் வரை விற்பனையானாலும், 10 கோடி ரூபாய் வரை செலவாகிறது. லாப நோக்கம் இல்லாமல், நஷ்டம் என தெரிந்தே ஒரு திட்டமாக அறிவிக்கப்பட்ட இது, பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நீர்நிலை, மெட்ரோ ரயில் நிலையம், வடிகால் மீது கட்டப்பட்டது என, ஏழு அம்மா உணவகங்கள் மூடப்பட்டன. தற்போது, 400 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இட்லி, பொங்கல், சப்பாத்தி போன்றவற்றை தனியார் ஹோட்டல்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும், இதனால் அம்மா உணவகத்தை நம்பி உள்ளவர்கள் ஏமாற்றம் அடைவதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. தற்போது வரை 756 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் சமீபத்தில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கூறினார்.






மேலும், 500 ரூபாய்க்கு கீழ் விற்பனையாகும் அம்மா உணவகங்களை மூடி, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும் எனவும் தி.மு.க., கவுன்சிலர்கள் கூறினர்.
ஏற்கனவே நிதிச்சுமையில் தள்ளாடும் மாநகராட்சிக்கு, அம்மா உணவக செலவை அரசு வழங்க வேண்டுமென கோரிக்கையும் வைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா காலத்தில் இலவச உணவு வழங்கப்பட்ட போது, அரசு நிதி உதவி செய்தது. இதர காலங்களில் ஏற்பட்ட அனைத்து செலவுகளும், மாநகராட்சி வரியில் இருந்து செய்யப்படுகின்றன.

அம்மா உணவக ஊழியர்களுக்கு தினமும் 300 ரூபாய் வீதம், மாதம் 9,000 ஊதியம் வழங்கப்பட்டது. செலவை குறைக்க, ஊழியர்களை நீக்கம் செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததால், சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்கப்படுகிறது. மாத விற்பனையை பொறுத்து, நான்கு முதல் 14 பேர் என்ற அடிப்படையில் ஊழியர்கள் உள்ளனர். இவர்களில், 60 முதல் 75 வயதுக்கு உட்பட்ட ஊழியர்களும் இருந்தனர்.

இந்நிலையில், 60 வயதுக்கும் மேற்பட்ட 130 பேரை, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், 1ம் தேதி நீக்கம் செய்யப்பட்டனர். இதில், அதிக ஊழியர்களை நீக்கிய மண்டலமாக அம்பத்துார், ராயபுரம் உள்ளது.
இதனால், இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி நீக்கம் செய்திருக்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க முடியுமா என, இதர துறைகளுடன் ஆலோசித்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பணி நீக்கம் செய்ததற்கான எந்தவித முன்னறிவிப்பும் செய்யவில்லை. 1ம் தேதி வேலைக்கு வந்த போது தான், இவர்கள் நீக்கம் செய்யப்பட்ட விபரம் தெரிந்தது. விசாரித்த போது, உயரதிகாரிகள் வாய்மொழி உத்தரவில் நீக்கம் செய்ததாக, மண்டல அதிகாரிகள் கூறினர். கணவன், பிள்ளைகள் கைவிட்டாலும், இத்தனை ஆண்டுகள் இந்த உணவகத்தை நம்பி, சொந்த காலில் வாழ்ந்து வந்தோம். பிள்ளைகள் திருமணம், பேரப் பிள்ளைகள் உயர் கல்விக்கு உதவியாக இருந்தது. அதிகாரிகள் மனது வைத்து, மீண்டும் நியமிக்க வேண்டும்.
- நீக்கப்பட்ட ஊழியர்கள்

அம்மா உணவக செயல்பாட்டில், எந்த குறையும் வைக்கவில்லை. உணவின் தரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. உணவுகளை அதிக விலைக்கு ஹோட்டல்களுக்கு விற்பது, பொருட்களை திருடியது போன்ற குற்றச்சாட்டுகள் மீது தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். தவறு செய்த ஊழியர்களை நீக்கம் செய்துள்ளோம். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்குகிறது. செலவை குறைக்க, தவிர்க்க முடியாத நடவடிக்கையாக, 60 வயதுக்கு மேற்பட்டோர் நீக்கம் செய்யப்பட்டனர். முதியவர்களாக இருப்பதால், மாற்றுப் பணி வழங்க முடியுமா என, இதர துறைகளுடன் ஆலோசித்து வருகிறோம்.
- மாநகராட்சி அதிகாரிகள்



தி.மு.க., கவுன்சிலர்கள் காரணமா?



அம்மா உணவகம் துவங்கும் போது, அப்போதைய அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பரிந்துரையில் நியமிக்கப்பட்ட ஊழியர்கள் தான் தற்போதும் உள்ளனர். இதில், சில ஊழியர்களிடம், ஒரு மாத ஊதியம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றனர்.தற்போது, இவர்களை நீக்கிவிட்டு, நாங்கள் பரிந்துரைக்கும் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என, சில தி.மு.க., கவுன்சிலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, 130 பேர் நீக்கப்பட்டனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.



ஊழியர்கள் நியமனம்




மாத விற்பனை ஊழியர்கள் எண்ணிக்கை20 ஆயிரம் ரூபாய் வரை 621 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை 880 ஆயிரம் ரூபாய் வரை 101.20 லட்சம் ரூபாய் வரை 121.60 லட்சம் ரூபாய் வரை 14சமையல் இல்லாத உணவகங்களில் 4

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (20)
adalarasan - chennai,இந்தியா
05-டிச-202222:21:29 IST Report Abuse
adalarasan அம்மா உணவகம் என்பது லாபத்திற்க்காக ,உருவாக்கப்படவில்லை, ஜெயா அவர்களால் ஏழை, எளிய அந்நாடும் வேலை செய்து பிழைப்பவர்களக்கா, இரண்டு வே லையும் சுமார், இருபபது,ரூபாயில்,உணவு கிடைக்க செய்த ஏற்பாடு அதை இந்த ஆட்சி ,பதவிக்கு வந்தநாளிரிருந்து படிப்படியாக,அழிக்கமுயற்சிக்கிறதுஒரே காரணம், அம்மாவால் உருவாக்க பட்டது. அரசாங்கத்தின் எந்த நிறுவனம், லாபத்தில் ஓடுகிறது டாஸ்மாக்கை தவிர? மனசாட்ச்சியே இல்லை. என்ன வேடனை என்றால், சமூக நீதி என்று பேருபவர்கள் இவ்வாறு செய்வது? கம்யூனிஸ்ட் போன்ற இடது சாரி காய்ச்சிகழும், சும்மா இருக்கிறது கவலையாக இருக்கிறது? நாடு எங்கே போகிறது ?
Rate this:
Cancel
hari -  ( Posted via: Dinamalar Android App )
05-டிச-202218:35:17 IST Report Abuse
hari இங்க ஒரு ஓட்டை விழுந்த boat முழுகபோகிறது... boat boatu
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
05-டிச-202210:56:28 IST Report Abuse
ram வோட்டு போட்டார்களே அனுபவிக்கட்டும். வரும் தேர்தலில் நாற்பத்தையும் அனுப்பி வையுங்கள்
Rate this:
sridhar - Chennai,இந்தியா
05-டிச-202212:05:38 IST Report Abuse
sridharஇந்த அரசுக்கு கல்தா குடுத்தா எல்லா நஷ்டத்தையும் ஈடு கட்டலாம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X