'கற்றுணர்ந்த பூஜை முறையால் மட்டுமே பரிபூரண பலன் கிடைக்கும்!'
Added : டிச 05, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



திருப்பூர் : 'வேதாகம முறைப்படி, முழுமையாக கற்றுணர்ந்து பூஜை செய்தால் மட்டுமே பரிபூரண பலன் கிடைக்கும்' என, வேதபாடசாலை முதல்வர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



ஹிந்து சமய அறநிலையத்துறை கோவில்களில், அர்ச்சகர் பயிற்சி ஐந்து ஆண்டுகள் என்பதை, தமிழக அரசு, ஓராண்டாக குறைத்துள்ளது. இந்த முடிவுக்கு வேதபாடசாலை முதல்வர்களும், ஆதீனகர்த்தர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், கூனம்பட்டி, ஸ்ரீகுருகுலம் வேதசிவாகம பாடசாலை முதல்வர் நடராஜ சுவாமிகள்:
வேதாகம சமஸ்கிருத பாடசாலை என்பது சாதாரண விஷயமல்ல; தொடர்ச்சியாக, ஐந்து ஆண்டுகள் வரை, பயின்றால் மட்டுமே, கோவில் கும்பாபிஷேகம் நடத்தும் அளவுக்கு, ஆகம சிற்ப சாஸ்திரங்களை அறிய முடியும். அதன் பிறகும் ஓராண்டு, செயல் பயிற்சி அவசியம். வேதாகம வல்லுனர்களுடன் அரசு தரப்பு ஆலோசித்து, அர்ச்சகர் பயிற்சி ஆண்டை, ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக அறிவிக்க வேண்டும்.

பெங்களூரு, ஸ்ரீஸ்ரீ குருகுல வேதாகம பாடசாலை, முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம்: நமது பூஜைமுறை என்பது, வெறும் தொழில் சார்ந்த முறையல்ல; பயிற்சி என்பது, திருக்கோவில் பூஜைமுறையை நேர்த்தியாக கற்பது. ஆலயம் அமைப்பு முறை; பூஜை முறைகள்; பரிகாரபூஜை முறைகள் என, ஆகமங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.

முழுமையாக கற்றுணர்ந்து, பூஜை செய்தால் மட்டுமே பரிபூரண பலன் கிடைக்கும். வழிபாட்டு மரபுகளை பாதுகாக்கவே, பூஜை முறை வகுக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர் பயிற்சியை, ஐந்து ஆண்டுகளாக நிர்ணயிக்க வேண்டும்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, வாகீசர் மடம், காமாட்சிதாச சுவாமிகள்: வேத ஆகமங்களில் குறிப்பிட்டுள்ளபடி, பூஜை முறைகளை அறிந்து கொள்ளவே ஓராண்டு ஆகிவிடும். அதன் பிறகே, முறையான பயிற்சி பெற்று அர்ச்சகராக முடியும். ஓராண்டுக்குள் பயிற்சி அளிப்பது என்பது, சிறப்பாக இருக்காது. நமது முன்னோர்கள், பூஜை முறைகளை வகுத்து வைத்துள்ளனர்; அதன்படியே பூஜை, வழிபாடு செய்ய, குறைந்தது மூன்று ஆண்டுகளாவது பயிற்சி பெற வேண்டும்; ஐந்தாண்டு பயிற்சியே சிறந்த அர்ச்சகர்களை உருவாக்கும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X