கோவை : கோவையில் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் மாணவிகளின் சைகை மொழியிலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் காணொலிக்கு, சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, பள்ளிக்கல்வித்துறையில் இருவார காலம், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு, பிடித்த சூழலாக பள்ளி வளாகத்தை மாற்ற, வழிபாட்டு கூட்டத்தில், சைகை மொழி பாடல் இசைத்தல், இணைவோம் மகிழ்வோம் என்ற தலைப்பில், கலை, விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசளிக்கப்பட்டன.
ஒருபகுதியாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில், கோவை மாவட்டத்தில், காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறன் மாணவர்களை இணைத்து, துடியலுார் அருகே அசோகபுரம், அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ்த்தாய் வாழ்த்து காணொலி வடிவமைக்கப்பட்டது. இதை, அமைச்சர் மகேஷ், பள்ளிக்கல்வித் துறை இணையதளத்திலும், தனது சமூக வலைதள பக்கங்களிலும் பதிவிட்டுள்ளார்.
இப்பாடலில், மாணவிகளின் முகபாவனைகள், காண்போரின் கவனத்தை ஈர்த்தது. இதற்கு, நெட்டிசன்களின் 'லைக்'குகள் குவிந்து வருகின்றன.