ஈரோடு, டிச.5-
ஈரோடு, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற விநாயகர் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. கோவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். அதன்பின் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷேகம், கோபூஜை, மகா தீபாராதனை நடந்தது. விழாவில் மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* பி.பி.அக்ரஹாரம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. கணபதி ஹோமம், யாக பூஜைகளை தொடர்ந்து, நேற்று காலை, 8:15 மணிக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.
* பவானிசாகரை அடுத்த கோடேபாளையம், மேட்டுப்பாளையம் சாலையில், முதுகால் மலையில் வெற்றிவேல் முருகன் கோவில் உள்ளது.
கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை, 8:௦௦ மணி அளவில் கோவில் விமான கலசம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம்
செய்விக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக செந்தில் குழுமங்களின் தலைவர் ஆறுமுகசாமி கலந்து கொண்டார்.