கரூர், டிச. 5-
கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது.
வங்க கடலில் உருவாகும், குறைந்தழுந்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வானம் மேகமூட்டமாக இருந்தது.
மதியம், 1:00 மணி முதல் கரூர் டவுன், வெள்ளியணை, வாங்கல், வேலாயுதம்பாளையம், பசுபதிபாளையம், திருமாநிலையூர், வெங்கமேடு, தான்தோன்றிமலை உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன், சிறிது நேரம் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.
இதே போல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
கிருஷ்ணராயபுரத்தை அடுத்த வயலுார், பஞ்சப்பட்டி, சேங்கல், வேங்காம்பட்டி, பாப்பக்காப்பட்டி, பழைய ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. மழை காரணமாக மானாவாரி நிலங்களில் சோளம், துவரை, பருத்தி பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.