கரூர், டிச. 5-
கரூர் அருகே, வன விலங்குகளை
வேட்டையாடியதாக, ஒருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட வனச் சரகர்கள் அறிவழகன், தனபால், சாமிநாதன் ஆகியோர், நேற்று அருகம்பாளையம் வேட்டைகாரன்புதுார் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாட்டு துப்பாக்கியுடன் வந்த கரூர், அரசு காலனியை சேர்ந்த திருப்பூர் சிங், 45; என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர், லைன்சென்ஸ் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததும், அவரிடமிருந்த பையில் மரநாய், 1, காட்டு பூனை, 2, முயல், 3, கவுதாரி, 2, ஆட்காட்டி குருவி, 1 என, வன விலங்குகள் இறந்த நிலையில் இருந்தன. இதையடுத்து வன விலங்குகளை வேட்டையாடிய திருப்பூர் சிங்கை, வனத் துறையினர் கைது செய்து விசாரிக்கின்றனர்.