நாமக்கல், டிச. 5-
நாமக்கல் உழவர் பயிற்சி நிலையம் சார்பில், கொல்லிமலை அருகே ஆலந்துார் நாட்டில், முன்னோடி விவசாயிகளுக்கான அடிப்படை பயிற்சி முகாம் நடந்தது.
உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் கவிதா, வேளாண் துறை திட்டங்கள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டங்கள், அவற்றின் பயன்கள் குறித்து விளக்கினார். தோட்டக்கலை அலுவலர் கவின், தோட்டக்கலைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள் பற்றி எடுத்துரைத்தார். கால்நடை உதவி மருத்துவர் கோவிந்தராசன், பட்டு வளர்ச்சித்துறை இளநிலை ஆய்வாளர் வெங்கடேஸ்வரன், வேளாண் பொறியியல் துறை உதவி மண் வளப்பாதுகாப்பு அலுவலர் அசோக்ராஜ், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை உதவி வேளாண் அலுவலர் பூங்கொடி ஆகியோர், தங்களின் துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினர்.
முகாமில், வட்டார வேளாண் அலுவலர் சத்தியபிரகாஷ், உழவன் செயலி, பிரதம மந்திரி கிசான் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். முன்னோடி விவசாயிகள், துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.