நாமக்கல், டிச. 5-
தமிழ்நாடு உதயா கியோகுஷின் காய்கான் புள் கான்டகட் கராத்தே ஸ்கூல் சார்பில், கராத்தே தேர்வு மற்றும் தற்காப்பு விழிப்புணர்வு முகாம், நாமக்கல்லில் நடந்தது. உதயா மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி தலைமை பயிற்சியாளர் உதயகுமார் தலைமை வகித்தார். முகாமில், மாவட்ட அளவில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு சுயமனித பாதுகாப்பு, சுயமனித ஒழுக்கம், பெண்களின் தற்காப்பு அவசியம் குறித்து விளக்கியதுடன், செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் கராத்தே, யோகா மற்றும் சிலம்பாட்ட பயிற்சி முறைகள், உடல், மனம் சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆரஞ்சு மற்றும் காவி பெல்ட் வரை தேர்வு நடந்தது. வரும், 29 முதல், மூன்று நாட்கள், டில்லி நொய்டாவில், அகில இந்திய அளவில், தேசிய சாம்பியன் ஷிப் கராத்தே போட்டியில், தலைமை பயிற்சியாளர் உதயகுமார் தலைமையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 20 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.