ஒகேனக்கல்: வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் குவிந்தனர்.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தற்போது ஒகேனக்கல்லில் நீர்வரத்து சீராக உள்ளது.
நேற்று வார விடுமுறை என்பதால், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பிரசித்தி பெற்ற மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டும், காவிரியாற்றில் குளித்தும், காவிரியாற்றில் பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர். பரிசல்கள் கொத்திக்கல் பரிசல் துறையில் இருந்து மெயின் பால்ஸ், மணல் திட்டு, உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டன. இதில் சவாரி செய்த மக்கள், காவிரியாற்றின் எழிலை கண்டு ரசித்தனர்.